பெர்முடா முக்கோணம் – Bermuda Triangle
“மர்மம்” என்றாலே கிட்டத்தட்ட நாம் அனைவரும் பொதுவாக சொல்லும் ஒரு விஷயம் பெர்முடா ட்ரையாங்கிள்தான் ! “ கப்பல்கள் எல்லாம் முழுகிருதாம், அந்த பக்கம் போற பிளேன்கள் எதுவும் திரும்பி வருவது இல்லையாம்.." என்றெல்லாம் பேசியிருப்போம். தொலைக்காட்சிகள் வாயிலாகவும் பத்திரிக்கைகளிலும் படித்திருப்போம்.
உண்மையிலேயே அது என்ன, அங்கு என்னதான் நடந்துக்கொண்டு இருக்கிறது... அலசுவோமா ?
பெர்முடா முக்கோணம் எங்கு அமைந்துள்ளது ?
மியாமி, ப்யூரிட்டோ ரிகோ மற்றும் பெர்முடா இந்த மூன்று முனைகளையும் சேர்த்து அதற்கிடையில் முக்கோண வடிவில் உள்ள கடற்பகுதிதான் பெர்முடா ட்ரையாங்கிள் ! இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 500,000 கிலோமீட்டர்கள் !

பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள இடத்தை காட்டும் வரைபடம்
பெர்முடா முக்கோணம்.. அல்லது டெவில்ஸ் ட்ரையாங்கிள் என்றழைக்கப்படும் அந்த பெரிய கடற்பரப்பு தன்னுள் அடக்கி வைத்துள்ள மர்மங்கள் ஏராளம்... இந்த இடம்தான் நூற்றுக்கணக்கான கப்பல்களையும், ஏரோப்ளேன்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது என்கிறார்கள். இந்த பகுதிக்கு சென்று காணாமல் போன மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமே 1000 த்தை தாண்டுமாம்..!
அதெல்லாம் சரி ! மற்ற கடற்பகுதிகளில் விபத்துகள் நடப்பதில்லையா! அது ஏன் பெர்முடா முக்கோணம் மட்டும் மர்மமாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது ?
காரணம் உண்டு மற்ற கடற்பகுதிகளில் எப்போதாவது விபத்துகள் நடக்கிறது. ஆனால் பெர்முடா பகுதியில் மட்டும்தான் அந்த பக்கம் சென்றாலே ஆள் காலி என்கிற நிலை உள்ளது.
இதுவரை ஒருவர் கூட அங்கு சென்று திரும்பி வரவில்லையா ?
இருக்கிறார்கள்... ஒரு குட்டி விமானத்தில் பயணித்த மூன்றே மூன்று பேர் ! அவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் விரிவாக பார்ப்போம்... அதற்கு முன் , பெர்முடா ட்ரையாங்கிள் மர்ம வரலாற்றை ஆராய்வோம்..

கொலம்பஸ் வந்த கப்பல் ( கற்பனை வரைபடம்)
அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்தான் முதன்முதலாக இதைப்பற்றி வரலாற்றுப்பூர்வமாக பதிவுசெய்தவர். 1492 ஆம் வருடம் அவர் அந்த கடல் பகுதியை கடக்கும்போது... அவர் கண்டதாக விவரிப்பது இதைதான், “ இதுவரை என் வாழ்நாளில் நான் பார்த்திராத அளவுக்கு பெரிய வெளிச்சம் ஒன்று தோன்றி, வானுக்கும் பூமிக்கும் சுழன்று அடிக்கிறது...! என்னவோ ஏதோ என்று சுதாரித்து கப்பலை திசை மாற்ற முயன்றேன்... அப்போதுதான் என் கப்பலில் உள்ள காம்பஸ் கட்டுப்பாட்டை இழந்து படுவேகமாக சுற்றிக்கொண்டு இருப்பது தெரிந்தது, திசைகள் தெரியாமல் திகைத்துப்போய் அந்த பகுதியை நெருங்காமல் விலகி கப்பலை செலுத்தினேன்... சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு கப்பல் இயல்பு நிலைக்கு திரும்பியது “ என்று தன் பயணக்குறிப்பில் கூறியுள்ளார்.
அடுத்தடுத்ததாக இப்போது (2017) வரை கப்பல்களும் விமானங்களும் காணாமல் போவது தொடர்கதையாகவேதான் உள்ளது ! காணமல் போன சிலவற்றை பார்ப்போம்...

பெர்முடா பகுதியில் சுழன்றடிக்கும் காற்று ( கிராபிக் )
1609 – ‘தி சி வென்ச்சர்’ என்கிற கப்பல்
1812 – ‘தெடோசியா பர் ஆல்ஸ்டன்’ என்கிற முன்னால் அமெரிக்க வைஸ் பிரசிடென்டின் மகள் சென்ற கப்பல் காணாமல் போனது.
1814 – யூ எஸ் எஸ் ஈபெர்வியர் (USS Epervier) என்கிற சரக்குக்கப்பல் அதில் சென்ற ஆட்களோடு காணாமல் போனது
1872 – மேரி செலஸ்டி என்கிற கப்பல் ! இதை கோஸ்ட் ஷிப் என்றும் சொல்வார்கள்...
டிசம்பர் 1945 US NAVE PLANES சில ப்ளோரிடா கடற்பகுதியில் மாயமாய் மறைந்துபோனது.. 1980 அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான பெரிய சரக்குக்கப்பல் அதே கடற்பகுதியில் தடயங்கள் எதுவும் இன்றி மூழ்கிப்போனது இதுமட்டுமல்லாமல் நிறைய படகுகள் விமானங்கள் திரும்பி வரவே இல்லை... தேடவும் வழியில்லை ஏனென்றால் கிட்டதட்ட 450000 சதுர மைல்கல் பரப்பளவில் எங்கு போய் தேடுவது ?
மார்ச் 1918 , சரக்குக்கப்பல் யூ எஸ் எஸ் சைக்லாப்ஸ் 309 ஆட்களுடன் சென்று காணாமல் போனது. ( இந்த கப்பல் காணாமல் போன பிறகுதான் பெர்முடா ட்ரையாங்கிள் மர்மம் சூடு பிடித்தது..)
அதன் பின் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ அங்கு காணமல் போவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்த 2017 ல் கூட ஒரு ஏதோ ஒரு ப்ளைட் காணாமல் போய்விட்டது என்கிறார்கள்.
மர்மமாக ஒரு விஷயம் நடக்கிறதென்றால் அதைச்சுற்றி நிறைய கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்படும் இல்லையா ? அதுபோல ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு நம் பெர்முடா முக்கோணத்தை சுற்றி... சாம்பிளுக்கு இரண்டு கதைகளை பார்ப்போம்.

பெரிய ஆக்டோபஸ் ( சித்தரிக்கப்பட்டது)
பெர்முடா கடற்பகுதியில் மிகப்பெரிய அக்டோபஸ் ஒன்று இருப்பதாகவும் அதுதான் விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கிவிடுவதாகவும் ஒரு கதை உண்டு.. கொடுமை என்னவென்றால் அதை நேரில் பார்த்தேன் என அடித்து சொல்லும் ஐ விட்னஸ்களும் இருப்பதுதான்... ஆனால் அதெல்லாம் கட்டுக்கதை என்று அவர்கள் தலையில் குட்டி அனுப்பிவிட்டார்கள்.

வேற்றுக்கிரகவாசி
இன்னொன்று, அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்கள். அவர்கள் அந்த பக்கமாக வரும் கப்பல்களையும் வானூர்திகளையும் பிடித்து, அதில் உள்ள மனிதர்களை ஆராய்ச்சிக்காக கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள் என்று அளந்து விடுகிறார்கள்.... ஆதாரம் ? என்று கேட்டால் ! ஒரு மேட்டர சொன்னா அனுபவிக்கனும்.. ஆதாரம் கேக்க கூடாது என்று நழுவுகிறார்கள்.
ஒரு குரூப் இதை வைத்து பல கட்டுக்கதைகளை கட்டி, புத்தகங்கள் எழுதி நிறைய சம்பாதித்தார்கள்.
சமீபத்தில், அங்கு மர்மங்கள் எல்லாம் ஒன்றும் கிடையாது... காரணத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவியல் ரீதியாக விளக்குபவர்கள், அண்டத்தில் உள்ள “ப்ளாக் ஹோல்” போல பெர்முடா முக்கோணத்தின் இதயப்பகுதியில் “ப்ளூ ஹோல்” என்றொரு ஹோல் இருப்பதாகவும் அதுதான் அனைத்தையும் இழுத்துக்கொள்கிறது என்றும் சொல்கிறார்கள்.

பளு ஹோல் மாதிரிப்படம் ( சித்தரிக்கப்பட்டது)
அது மிதக்கும் பொருள்களுக்கு ! விமானங்களை எப்படி இழுக்கும் என்று கேட்டால் மிக மிக நீண்ட விளக்கம் கொடுக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க... தப்பி வந்தவர்கள் சொல்லும் கதை இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது... ! அவர்கள் டைம் வார்ப், அடுத்த டைமன்ஷன், டைம் டிராவல் என்றெல்லாம் அந்த மர்மமான இடத்தை பற்றி விவரிக்கிறார்கள்.

பெர்முடா முக்கொனப்பகுதியில் பறக்கும்தட்டை பார்த்து அலறும் மாலுமி ( சித்தரிக்கப்பட்டது )
தப்பி வந்தவர்கள் பேட்டியையும், பெர்முடா முக்கோண மர்மங்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்களையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்....
அடுத்த பகுதி : தப்பி வந்தவர்களின் அனுபவம் மற்றும் ப்ளூ ஹோல் பற்றிய விளக்கம்

Add a Comment
18 Comments
Appo Anga irukurathu magnetic force illaiya
ohhh apadiya
சுவாரிஷயம் மிகுந்த கருத்து நண்பா ,இதை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அதில் எலக்ட்ரிக் dipole pola centre part of earth nu soldranga...magnetic force மூலையம் entha oru electronic gadgets work aagathu nu kaelvi paturukan
I need more stories
வாழ்த்துக்கள்,
மர்மமான கதை
நெஸ்ட் பதிவு எப்படி பாஸ் போடுவீங்க
Amazing informations, may be people will get it from wiki, but to me, i get everything here and liked it.. Good to go, make it more illustrative Bala..Wish you the best to run this site and one day you will be the king information people may search to..
Awesome
Unmaya?
Very nice
Sema story
I need more interesting things about Bermuda triangle
Super
உன்னதமான படைப்பு
செம
Nice
Very interesting