அதென்ன அண்டம்?

ஆங்கிலத்தில் யுனிவர்ஸ் (universe) என்பார்கள். அண்டம் என்பது நம் கற்பனைக்குள் அடக்கமுடியாத அளவு மிகப்பெரியதும், அதிசயமானதும், மர்மங்களை உள்ளடக்கியதும் ஆகும்.

ஆம், அண்டம் அளவில்லாதது, விரிந்துக்கொண்டே செல்வது, (infinite) வார்த்தைகளில் விளக்கவே முடியாதது! அதனால், அதை நேரடியாக விளக்குவதைவிட அதற்குள் அடங்கியுள்ள மற்றவைகளை பார்ப்போம், அதிலிருந்து அண்டத்தை அதன் அளவை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பெருவெடிப்புக்கு பிறகு ஒரு பலூனை போல இந்த அண்டம் விரிந்துக்கொண்டே செல்கிறது, அண்டத்தில் ஒரு அங்கமான நம் பால்வீதியும் (Spiral Galaxy) அதோடு சேர்ந்து விரிந்துக்கொண்டே செல்கிறது என்கிறார்கள்.

ஆமாம்! இடையில் ஏதோ பெருவெடிப்பு என்கிறீர்களே அது என்ன ?

பெருவெடிப்பு கோட்பாடு (BigBang Theory)

நம் பிரபஞ்சம் இப்படிதான் தோன்றியது என ஏகப்பட்ட தியரிகள் உண்டு. அதில் பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தியரிதான் "பிக் பேங்க்" தியரி.  இது நம் பிரபஞ்சத்தின் பிறப்பை (Origin of the Universe) விளக்கும் ஒரு கோட்பாடு ஆகும். பிரபஞ்சம் எப்படி உருவானது என்கிற கேள்விக்கு, இந்த பெருவெடிப்பில் இருந்துதான் பதிலை தேட வேண்டும், இதில் ஆரம்பித்துதான் இன்றுவரை எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கிறார்கள்.

சுருக்கமாக சொல்லவேண்டும் எனில், ஆதியும் அந்தமும் இல்லாமல், ஒரு கடுகைவிட கோடி மடங்கு சிறிய ஒரு துகள், அதற்குள் அளப்பறிய சக்தியையும், எடையையும் சேர்த்துவைத்து அழுத்தம் தாளாமல் வெடித்தது. அப்படி வெடித்து சிதறிப்பறந்த துகள்கள் அருகில் உள்ளவைகளை தன்பால் ஈர்த்து, அதையும் சேர்த்துக்கொண்டு பெரிதாகி, தனித்தனியாக பிரிந்து கோள்கள் ஆனது. அதில் ஒன்றுதான் சூரியக்குடும்பம், அதில் தக்கனூண்டுதான் நம்ம பூமி!

சரிதான்! பிரபஞ்சம் என்கிறோமே! அதற்குள் என்னவெல்லாம் உள்ளது?

பால்வீதிகள் (Galaxy)

கருந்துளைகள் (Black Holes)

நட்சத்திரங்கள் (Stars) 

கோள்கள் (Planets)

வால் நட்சத்திரங்கள் (Comet)

விண்கற்கள் (Astriod)

 

நான் குறிப்பிட்டுள்ளது 10% தான் இதைத்தாண்டி நிறைய உள்ளது டார்க் மேட்டர்ஸ், வொய்ட் மேட்டர்ஸ், வார்ம் ஹோல்... இன்னும் இன்னும்... நாம் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.. ஒவ்வொன்றையும் தனித்தனி கட்டுரைகளாக விளக்குகிறேன்.

இப்போதைக்கு நம் சூரிய குடும்பத்துக்குள் வருவோம்! 

சூரியக்குடும்பம் (Solar System)

பூமியில் இருந்து தொடங்குவோமா? 

நாம் எங்கிருக்கிறோம்? 

பூமியில். (Earth)

பூமி எங்குள்ளது?

சூரிய குடும்பத்தில். ( Solar System)

சூரிய குடும்பம் எங்குள்ளது?

பால்வீதியில். (Galaxy)

பால்வீதி (Galaxy) எங்குள்ளது?

அண்டத்தில்.(Universe)

அண்டம் எங்குள்ளது?

சூனியத்தில்.....

எப்படிப்பார்த்தாலும் எங்கு சுற்றிச்சுற்றி வந்தாலும் கடைசியாக அண்டம் என்பது சூனியம்தான். கடுகைவிட குட்டியாக இருந்து வெடித்து சிதறி இந்த பிரபஞ்சம் உருவானது என்கிறார்கள்! அந்த கடுகைவிட சிறிய ஒன்று எப்படி உருவனாது?  அதற்கும் முன் என்ன என்கிற கேள்விக்குதான் பதில் இல்லை. அங்குதான் கடவுளை கைகாட்ட வேண்டியுள்ளது. இதை இன்னமும் சிக்கலாக யோசித்தால் குவாண்டம், கருந்துளை என டீப்பாக போகும். விட்டுவிடுவோம்.

நம்மிடத்தில் இருந்து, அதாவது நாம் வாழும் பூமியில் இருந்து இந்த பால்வீதியின் தொலைவு என்ன? ஒவ்வொரு கிரகங்களும் எவ்வளவு தொலைவில் உள்ளது?

சின்னதாக ஒரு கணக்கு பார்ப்போமா?

அதற்கு முன் தொலைவை நாம் எப்படி கணக்கிடுகிறோம் என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்! நம் பிரபஞ்சத்தில் செல்லுபடியாகும் அதிக அளவு வேகம் என்பது ஒளியின் வேகம்தான் (Speed of Light). சரி.. அதென்ன ஒளியின் வேகம் ?

ஒளியின் வேகம் என்பது ஒளி (Light) ஒரு விநாடிக்கு கடக்கும் தூரம்!

ஒளி ஒரு விநாடியில் கடக்கும் தூரம் எவ்வளவு?  

கிட்டத்தட்ட மூன்று இலட்சம்  கிலோமீட்டர்கள்! இந்த கணக்கின்படி நம் பால்வீதியில் உள்ள ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை பார்ப்போமா?

முதலில் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனில் இருந்து ஆரம்பிப்போம்.

பூமி – சந்திரன் தொலைவு ஒளிவேகத்தில் = 1.3 விநாடிகள்! அப்படி என்றால் தொலைவு? கணக்கிட்டு பாருங்களேன், தலைசுற்றும். கிட்டத்தட்ட 384,400 கிமி!

அப்படியென்றால் சூரியன்? கிட்டத்தட்ட 149,600,000 கிலோமீட்டர்கள்! நேரத்தை நீங்களே யோசித்துப்பாருங்களேன். ஒரு விநாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் சூரிய ஒளி நம்மை வந்து அடைந்தால். இந்த மொத்த தூரத்தை கடந்து வர சூரிய ஒளி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?

பதில் கிடைத்ததா ?

நானே சொல்கிறேன் கிட்டத்தட்ட 8 நிமிடங்கள்!

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் ! “அப்படியென்றால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சூரியன் 8 நிமிடங்கள் பழைய சூரியனா?” என,  

விடை... ஆம் என்பதே! சற்று யோசித்து பாருங்கள் புரியும்.

அதாவது சூரியன் உமிழும் ஒளியானது, நம் பிரபஞ்சத்தில் செல்லுபடியாகும் அதிகபட்ச வேகத்தில் (Light Speed) நம்மை வந்தடைய சற்றேறக்குறைய 8 நிமிடங்கள் பிடிக்கிறது! அப்படியென்றால் தற்போது நாம் பார்க்கும் சூரியன் 8 நிமிடங்கள் பழையதுதானே?

இந்த கணக்கின்படி பூமியில் இருந்து ஒவ்வொரு கிரகங்களின் தூரம் என்னவென்று பார்ப்போமா? 

1.
கிரகங்கள்
(Planets)
(Mercury ) புதன்
தொலைவு
(Distance in Km)
92,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
21
2.
கிரகங்கள்
(Planets)
(Venus) சுக்கிரன்
(அ) வெள்ளி
தொலைவு
(Distance in Km)
42,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
10
3.
கிரகங்கள்
(Planets)
(Mars) செவ்வாய்
தொலைவு
(Distance in Km)
78,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
2.3
4.
கிரகங்கள்
(Planets)
(Jupiter) வியாழன்
(அ) குரு
தொலைவு
(Distance in Km)
628,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
143
5.
கிரகங்கள்
(Planets)
(Saturn) சனி
தொலைவு
(Distance in Km)
1,277,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
292
6.
கிரகங்கள்
(Planets)
(Uranus) யுரேனஸ்
தொலைவு
(Distance in Km)
2,720,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
621
7.
கிரகங்கள்
(Planets)
(Neptune) நெப்டியூன்
தொலைவு
(Distance in Km)
4,347,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
992
8.
கிரகங்கள்
(Planets)
(Pluto) ப்ளுடோ
தொலைவு
(Distance in Km)
5,720,000,000
காலம் (வருடங்களில்)
(Time in Light Speed)
1,306

ஒவ்வொன்றின் தொலைவும் மலைக்க வைக்கிறதா? வருடங்களையும், தூரத்தையும் கணக்கிட்டு பாருங்களேன். தலைசுற்றும். இதெல்லாம் நம் சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களின் தூரம், இதுபோல் கிட்டத்தட்ட 500 சூரியக்குடும்பங்கள் நம் பால்வீதியில் உள்ளது! இதுபோன்ற ஆயிரக்கணக்கான பால்வீதிகள் (Galaxy) நம் அண்டத்தில் உள்ளது!

மூச்சடைக்கிறதா?  இதையெல்லாம் ஆராயும் நம் வாழ்க்கையும், நாம் வாழும் பூமியும் இப்பிரபஞ்சத்தில் எத்தனை சிறியது என்று புரிகிறதா ?

நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது பால்வீதில் உள்ள ஒரு சூரிய குடும்பத்தில்! இதுபோல இன்னும் எண்ணற்ற சூரிய குடும்பங்கள் நம் பால்வீதியிலேயே (Galaxy) உள்ளது. அதெல்லாம் தனித்தனியாக பார்க்க நமக்கு ஆயுசு போதாது. அதனால் இதோடு நிறுத்திக்கொள்வோம்.

நம் பால்வீதியின் (Galaxy) மொத்த அளவு, ஒளிவேகத்தில் எவ்வளவு தெரியுமா ? கிட்டத்தட்ட 100,000 ஒளி வருடங்கள் !

அடுத்து நம்ம பக்கத்து வீடுபோல அருகில் இருக்கும் அன்ட்ரோமிடா (Andromeda) கேலக்ஸி ! அதன்  தூரம் தெரியுமா ? அதிகமெல்லாம் இல்லை ஜஸ்ட் 25 இலட்சம் ஒளி வருடங்கள்!

இப்போது கற்பனை செய்து பாருங்களேன்.. பிரபஞ்சத்தின் அளவு புரியும்... 

ஹூம்... அடுத்த சண்டே ஒரு ஆட்டோ பிடிச்சி போய்ட்டு வரணும் !

அடுத்து : ப்ளாக் ஹோல்கள் என்றால் என்ன ?