Lungfish – நுரையீரல் மீன்
தமிழ் படத்திலோ அல்லது தெலுங்கு படத்திலோ இப்படி ஒரு காட்சியை அனேகமாக நாம் எல்லோரும் பார்த்திருப்போம், ஹீரோவை அடித்து கொன்று புதைத்துவிடுவார்கள்... ஹீரோயினோ அல்லது ஹீரோவுடைய அம்மாவோ அழுதுகொண்டே “ராஜா என்னைய காப்பாத்து” அப்டீன்னு கத்துவாங்க.. அந்த குரல் கேட்டு ஹீரோவுக்கு கைகள் அசையும் கால்கள் துடிக்கும், சுவரை பிளந்துக்கொண்டு “என்னை நீ புதைத்தாலும் நான் எழுவேன்டா” என்று பஞ்சோடு வெளியேறுவார்...
இது சினிமாவில் கற்பனையாக ஹீரோயிசத்தைக்காட்ட உருவாக்கப்படும் காட்சி...! இதே போல நிஜத்தில், புதைத்த உடல் மீண்டும் உயிர்பெற்று வந்தால்.. அதுவும் புதையுண்ட சில ஆண்டுகளுக்கு பிறகு! என்ன நடக்கும்? எப்படி இருக்கும்?
இதுதான் லங் பிஷ்க்கு நடைபெறுகிறது.. விரிவாக பார்ப்போமா?
ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நீர்நிலைகளில் வாழும் ஒருவகை மீன்தான் “லங் பிஷ்” எனும் அதிசயம்! ஒரு மீன்... இதில் என்ன அதிசயம்! ஆம் லங் ஃபிஷ் அதிசயம்தான்... ஏனென்றால், “லங் பிஷ்” தண்ணீரில்லாமல் உணவில்லாமல் அதிகபட்சம் 5 வருடங்கள் வரை வாழும்! அதெப்படி தண்ணீர், உணவு இன்றி 5 வருடங்கள் வரை உயிர்வாழ முடியும்? “என்னய்யா கதை விடுறியா?" தண்ணீர் இல்லாமல் மீன் எப்படி வாழும்?” என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். நியாமான கேள்விதான் அறிவியல் விளக்கங்களோடு பார்ப்போமா...?
குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடக்கணக்கில் மழை பொய்த்துப்போய் நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப்போவது உண்டு...! அந்த சமயத்தில் தண்ணீரில் வாழும் எல்லா உயிரினங்களும் இறந்து போனாலும், இந்த வகை மீன்கள் மட்டும் இறப்பதில்லை. ஆனால் காணாமல் போகிறது! திரும்ப மழை வரும் சமயங்களில் யாரும் கொண்டுவந்து விடாமலேயே தடாகத்தில் தானாகத் தோன்றி குத்தாட்டம் போடுவதைக்கண்ட விஞ்ஞானிகள்.. இதென்ன...? எப்படி இது நடக்கிறது, என்னதான் கதை? என ஆராய ஆரம்பித்தனர்.
வாங்க.. நாமும் அவர்களோடு தண்ணீருக்குள் தொபுக்கடீர்ன்னு குதிச்சி லங் பிஷ்ஷ ஃபாலோ பண்ணுவோம்....
ஆய்வுக்காக ஒரே ஒரு மீனை கண்காணித்தார்கள்... வற்றிப்போகும் தருவாயில் இருந்த ஒரு நீர்நிலையில் கேமரா வைக்கப்பட்டு, அந்த மீனை கண்காணிதார்கள். நடந்ததை அப்படியே பார்ப்போம்...

வற்றிப்போன நீர்நிலையில் கிடக்கும் லங் பிஷ்
நீர் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது... நிலம் வரண்டுப்போகிறது... “லங் பிஷ்” தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது...! அதன் வாய் தண்ணீருக்காக தவிக்கிறது.. ஒரு நாள் இரண்டு நாட்கள் என நாட்கள் நகர நகர.. நீரில்லாமல் தவிக்கும் மீன்... குழைந்த சேற்றை கொஞ்சம் கொஞ்சமாகவிழுங்கி தன்னுடல் புகும் அளவிற்கு இடத்தை ஏற்படுத்திக்கொண்டு சேற்றுக்குள் படுத்துக்கொள்கிறது.
வெய்யில் கடுமையாக கொளுத்த... மண் மேலும் மேலும் இருக்கிறது. பாளம் பாளமாக மண் வெடிக்கிறது... உள்ளே சென்ற “லங் பிஷ்” ஜீவ சமாதியடைகிறது. இதைப்பற்றி எல்லாம் தெரியாமல் அருகில் இல்ல கிராமவாசிகள் சிலர், அந்த மண்ணை கட்டியாக்கி செங்கல் செய்கிறார்கள். அந்த செங்கல்லுக்குள் ஜீவசமாதியாகி கிடக்கும் நம்ம ஹீரோவான “லங் பிஷ்” ஐயும் சேர்த்து.
நாட்கள் நகர்கிறது.. கேமரா தொடர்ந்து கண்காணிக்கிறது.. நாட்கள் கரைந்து மாதங்கள் ஆகி வருடங்கள் ஆகிறது.. சுத்தமாக அங்கு மழை இல்லை! ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்!

கடினாமான செங்கல்லின் உள்ளே
கவனிக்க... செங்கல்லுக்குள் ஜீவ சமாதியான நம்முடைய “லங் பிஷ்” கல்லுக்குள்தான் கிடக்கிறார்! இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு நன்னாளில் அந்த பகுதியில் மழை கொட்டுகிறது, ஆறு, ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்ப... செங்கல்லுக்குள் ஜீவ சமாதியடைந்த நம்ம ஹீரோ சட்டென விழிக்கிறார்..! கரைந்துக்கொண்டிருக்கும் செங்கல்லை உடைத்துக்கொண்டு “புதைச்சாலும் வருவேண்டா “ என பஞ்ச் அடிக்காமல் வெளியேறி, நழுவி நீர்நிலைக்கு சென்று வழக்கமான மீனாக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்..! ஆய்வாளர்கள் திகைத்துப்போனார்கள்.. இதெப்படி சாத்தியம் ?

மணலுக்குள் புதைந்துகிடக்கும் லங் பிஷ்ஷை வெளியே எடுக்கும் படம் !
ஆய்வாளர்களுக்கு நம்மாளு செத்து செத்து விளையாடியதெல்லாம் மேட்டர் இல்லை! அதெப்படி ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் சமாதியாகி பின் பிழைத்தது! என்று மண்டையை பிய்த்துக்கொண்டனர். ஆய்வில் அவர்கள் கண்ட ஒரு விஷயம் அவர்களை திகைக்க வைத்தது... அதை நெருக்கமாக கவனித்ததில் சில விஷயங்களை தெரிந்துக்கொண்டனர்..! லங் ஃபிஷ் அதன் உடலில் உள்ள பயாலஜிக்கல் கிளாக்கை மிக மிக நிதானமாக ஓட வைக்கிறது! சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில். அது தன்னைத்தானே கோமா நிலையில் வைத்துக்கொள்கிறது.(பயாலஜிக்கல் கிளாக் என்றால், சுவரில் மாட்டும் கடிகாரம் அல்ல..! எளிதாக சொல்லவேண்டும் எனில், நமக்கு வயதாக ஆக உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அல்லவா.. அதை குறிக்க பயன்படுகிறது.. அதைப்பற்றி தனியாக பார்ப்போம்)
அதெல்லாம் சரி... நம்ம “லங் பிஷ்” பயாலஜிக்கல் கிளாக்கை எப்படி மட்டுப்படுத்துகிறது? எப்படி தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறது? என்று புரியாமல் விஞ்ஞானிகள் மண்டையை பிய்த்துக்கொண்டனர். இன்னும் அறிவியலுக்கே விளங்காத மர்மம் அது...
“தண்ணீர் இல்லாமல் வாழ்கிறது என்கிறீர்கள் சரி! ஆனால் வருடக்கணக்கில் உணவில்லாமல் எப்படி வாழ்வது ? உயிர் போய்விடாதா ? “ என்கிற கேள்வி எழலாம்...
“லங் பிஷ்” தன் தசைகளில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பை, உயிர் வாழ தேவையான அளவுக்கு மட்டும் உள்ளுக்குள்ளேயே மிக மிக சொற்பமாக சாப்பிட்டு உயிரை நீட்டித்துக்கொள்கிறதாம்! இன்புட் அவுட்புட் இரண்டும் இல்லை!

தண்ணீருக்கு நழுவி வரும் லங் பிஷ் !
இந்த சமாதி காலங்களில் பயாலாஜிக்கல் கிளாக்கின் வேகத்தை “லங் பிஷ்” மட்டுப்படுத்திவிடுவதால் அதற்கு வயதாவதும் இல்லை என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்...!!!
ஆய்வுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது, ஒருநாள் “லங் பிஷ்” எப்படி பயாலாஜிக்கல் கிளாக்கை தாமதப்படுத்துகிறது என்று கண்டுபிடித்துவிடுவோம் என்கிறார்கள்.. கண்டுபிடித்துவிட்டால் சில கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு நோயாளியை தயார் செய்யும்வரை இதுபோன்ற தூக்கத்தில் ஆழ்த்திவிடலாம், ப்ரைன் டெட் எனப்படும் மூளைச்சாவு ஏற்படாது என்கிறார்கள்...
ஆண்டுக்கணக்கில் விண்வெளி ஆய்வுக்காக செல்லும் மனிதர்களை இந்த தூக்கத்தில் ஆழ்த்தி அவர்களுக்கு வயதாகாமல் தடுக்கலாம்.. இலக்கை அடையும்வரை அவர்கள் எழாமல் இருக்கலாம்...! லங் பிஷ்சுடைய உடலில் ஏற்படும் பயாலாஜிக்கல் மாற்றங்களை கண்டுபிடித்துவிட்டால் நிறைய ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள்...
ஆய்வுகள் தொடர்கிறது, ஆரம்ப கட்டத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்கிறார்கள்... அப்படி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் ரஜினி போன்ற நடிகர்களுக்கு அதை கொடுத்து வயதாவதை தடுத்து.. உண்மையிலேயே மீனா பொண்ணுக்கு ஜோடியாக நடிக்கவைத்துவிடுவார்கள்... பயந்து வருது...
பார்ப்போம்....

Add a Comment
2 Comments
Nanum rompa varusathukku munnadi tv program la pathuruken thanni vathi pogavum mannukku adiyila meen pogum apro konja nall kalichu malai peiyavum marupadiyum veliya varum apo na 10th tha padichutu irunthen athuvum illama athu English la telecast achu ithu enakku appo puriyala but..
Nice. I saw a film like that.