கொம்பு முளைத்த மனிதர்கள்
“ என்னது? மனுஷனுக்கு கொம்பா? போங்கய்யா அங்கிட்டு” என்கிறீர்களா? அதிசயம்தான்.. ஆனால் உண்மை! கொம்பு முளைத்த மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
நாம் அறியாத பல அதிசயங்களும், மர்மங்களும் இந்த பூமி முழுவதும் இறைந்துக்கிடக்கிறது. சிலவற்றிற்கு அறிவியல் விளக்கங்கள் கிடைக்கிறது, சில அறிவியலுக்கு கண்ணாமூச்சி காட்டி மர்மமாகவே தொடர்கிறது! அதில் ஒன்றுதான் தற்போது நாம் பார்க்க இருக்கும் கொம்பு முளைத்த மனிதர்கள்!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், 'Sayre' என்னும் ஊரில் 1800 களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சில வித்தியாசமான மண்டை ஓடுகள் வெளிப்பட்டது, அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவைகளை பாதுகாப்பாக தோண்டி எடுத்தனர். புதைந்த எலும்புக்கூட்டில் என்ன மர்மம், அதிலென்ன ஆச்சர்யம்? என்கிறீர்களா... சொல்கிறேன், தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளின் தலைக்கு மேல சின்னதாக இரண்டு கொம்புகள் இருந்ததாம்.
சரியாக புருவங்களுக்கு மேலே. இரண்டு கொம்புகள் !
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகூடுகளில் மண்டையில் இரண்டு கொம்புகள் இருந்தது மட்டும் மேட்டர் அல்ல! விஷயம் அதன் சராசரி உயரம்தான். ஆம். அந்த எலும்புக்கூடுகளின் சராசரி உயரம் 7 அடிகள்! மற்ற பாகங்கள் அனைத்தும் நம்மை போலவே சாதாரணமாக இருந்ததாம். ஆனால், உயரம் மட்டும் நம்மைவிட அதிகம். பரபரத்த ஆராய்ச்சியாளர்கள் அந்த எலும்புக்கூட்டை சோதனைக்கு உட்படுத்தி அவைகள் புதைக்கப்பட்ட காலத்தை கண்டுபிடித்தனர்... அது கி.பி 1200.
அமெரிக்காவில் இது போன்ற கொம்புகளுடன் உடைய மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்றாலும், கடைசி கிடையாது. அதன்பிறகு 19 ஆம் நூற்றாண்டில் இதே போல சில மண்டையோடுகள் நியூயார்க் அருகில் உள்ள Wellsville என்கிற கிராமத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது !
இதெப்படி சாத்தியம். கொம்பு எப்படி? மனிதர்களுக்குள் இரண்டு வகைகள் மட்டுமே தப்பிப்பிழைத்ததாக சொல்வார்கள். நியாண்டர்தால் மற்றும் நம்மை போன்ற நாகரிக மனிதர்கள். நியாண்டர்தால் மனிதர்கள் தற்போது இல்லை. நாம் மட்டுமே வசிக்கிறோம். அப்படியென்றால், இந்த கொம்பு முளைத்த மனிதர்கள் என்ன வகை? இவர்கள் தனியாக வசித்தர்களா? அல்லது பிறக்கும்போது குறையாக பிறந்திருப்பார்களா? இப்படி யோசித்தாலும் சில விஷயங்கள் முரண்படுகிறது. ஒன்றோ இரண்டோ இருந்தால் குறைபிறப்பு எனலாம். நிறைய எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கிறது! இதை எந்த கணக்கில் வைக்க ?

கொம்புடன் அலெக்சாண்டர்
இதுதவிர, பண்டைய கிரேக்க வரலாற்றில், மனித கொம்புகள் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதாவது கொம்பு முளைத்த மனிதர்களை தலைவர்களாக ஏற்று வணங்கியிருக்கிறார்கள். கொம்பு என்பது தலைமையை குறிக்கிறதாம்!

கொம்புடன் உள்ள இன்னொரு படம் !
மாமன்னர் அலெக்சாண்டருக்கும் இது போன்ற கொம்புகள் இருந்ததாக ஒரு புரளி உண்டு. அதற்கான ஆதாரங்கள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும். முழுவதுமாக அதை புறம்தள்ளிவிட முடியாது. காரணம் அவருக்கு கொம்பு இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக அலெக்சாண்டருடைய ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் சிலவற்றில், பொறிக்கப்பட்ட அவர் உருவத்தில் கொம்புகள் உள்ளது.
படித்துவிட்டு, இவையெல்லாம் அமெரிக்க மற்றும் கிரேக்க வரலாற்றில் வரும் கற்பனை சங்கதிகள்! என்று கடந்து போகும் முன் யோசியுங்கள்... நாம் அன்றாடம் பேசும் வார்த்தைகளில் “நீ மட்டும் என்ன பெரிய ஆளா? உனக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு“ என்கிறோமே! என்கிற சொல்லாடல் எங்கிருந்து வந்திருக்கும் என.

Add a Comment
6 Comments
Kandipa sinthikira madiri ending... Awesome...
Sinthikka kudiya visiyam gud
super super
நீ மட்டும் என்ன பெரிய ஆளா உனக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு சற்று சிந்திக்க தோன்றுகிறது
Ena ji thidirnu ipdi solitinga.. oru velaa mutuna kombu mulaikumo..
Last paragraph - Factu factu