ஒளிரும் கடல்
அதிசயங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த நம் பூமியில், இயற்கை நம்மை சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்று. அதுதான் பயோபே கடற்கரை (biobay)
பயோபே கடற்கரை
வட அமெரிக்காவில் அமைந்துள்ள "Puerto Rico" எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரைதான் பயோபே.
அது கடல்தானே அதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?
பகலில் சாதாரணமாக இருக்கும் இக்கடற்கரை இரவில் ஒளிரும்! ஆம்... இரவு நேரங்களில் தகதகவென ஜொலிக்கிறது ! அங்குள்ள பகுதிகளில் குதித்தாலோ, மண்ணை தேய்த்தாலோ, நீங்கள் தூண்டும் இடங்கள் எல்லாம் நீல நிறமாக ஒளிரும்.
அட.. அதெப்படி ஒளிரும் ?
காரணம் "Bioluminescent - பயோலூமின்சென்ட்" எனும் நிகழ்வு.
பயோலூமின்சீன் அல்லது பயோலூமின்சென்ட் என்றழைக்கப்படும் அந்த ஒளி விளைவு எப்படி ஏற்படுகிறது?
அந்த கடற்பரப்பில் நிறைந்து கிடக்கும் குட்டிகுட்டி கண்ணுக்கு தெரியாத உயிரினங்களான “டைனோப்ளாகேல்லட்ஸ் Dinoflagellated” (என்னய்யா பேர் வைக்கிறீங்க...?) என்கிற அந்த உயிரினங்களை நாம் தூண்டும்போது அது தன் எதிர்ப்பை காட்ட கூட்டாக ஒளிர்கிறதாம். அது மனிதனாக இருக்கலாம், கடல் அலையாக இருக்கலாம், மீன்களாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் அந்த இடத்தை கடந்தால் அது ஒளிரும்.
அந்த நுண்ணிய பாக்டீரியாக்கள் அந்த பகுதி முழுவதும் நிறைந்துக்கிடக்கிறது, நாம் அந்த மணலில் காலை வைத்தாலும் ஒளிரும், கடலில் குளிக்க இறங்கினாலும் ஒளிரும், ஏன் ? அலை அடித்தாலும் ஒளிரும்.
இந்த பயோலூமின்சீன் எப்படி நடக்கிறது ?
அந்த குட்டிகுட்டி “டைனோப்ளாகேல்லட்ஸ்” ஆபத்து என்று உணரும்போது அதற்குள் இருக்கும் Luciferin எனும் கெமிக்கலை வெளியிடுகிறது, அந்த லூசிபெரின் ஆக்சிஜனோடு கலக்கும்போது அதில் ஏற்படும் கெமிக்கல் ரியாக்ஷன் காரணமாக அது ஒளிர்கிறது... இதுதான் அங்கு நடப்பது!
நம்மூரில் மின்மினிப்பூச்சிகளை பார்த்திருக்கிறோம் அல்லவா அது போல! என்ன ஒரு வித்தியாசம் என்றால் மின்மினி பூச்சிகள் சதா ஒளிர்ந்துக்கொண்டே இருப்பது போல “டைனோப்ளாகேல்லட்ஸ்” ஒளிராது. அது தூண்டப்படும்போது மட்டும்தான் ஒளிரும். அதுதான் ஆச்சர்யங்களுக்கு காரணம்!
ஆனால்.. அந்த கண்ணுக்கு தெரியாத பூச்சியின் உடலில் லூசிபெரின் எப்படி உருவாகிறது.. அதுதான் இயற்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று! அதுதான் அதிசயம்...
இதே பயோலூமின்சீன்தான் ஒளிரும் சிலவகை கடல்வாழ் உயிரினங்களும், நாம் அடிக்கடி பார்க்கும் மின்மினி பூச்சிகளும் ஒளிவீச காரணம் என்கிறார்கள்!
பயோலூமின்சீன் விளைவு ஏற்படும் மற்ற சில இடங்கள் :

Carins – கரின்ஸ், ஆஸ்திரேலியா

Gippsland Lakes – கிப்ஸ்லேண்ட் லேக், ஆஸ்திரேலியா
Manasquan Beach, NJ, - மனஸ்க்வான் பீச், நியுஜெர்சி, அமெரிககா

Mission Bay, San Diego, CA, - மிஷன் பே, அமெரிககா

Torrey Pines Beach, San Diego, CA – டோரே பைன்ஸ், அமெரிககா

Cortez, FL – கார்டெஸ், அமெரிக்கா

Luminous Lagoon, Trelawny, Jamaica – லுமினோஸ் லாகூன், ஜமைக்கா

Mosquito Bay, Vieques, Puerto Rico – மஸ்கிடோ பே
வசதியுள்ளவர்கள் வெளிநாட்டு டூர் போக விரும்பினால் இந்த இடத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


Add a Comment
2 Comments
அந்த மண்ணில் உள்ள உயிரி இந்தியாவில் பரவுமா
Nan lam Bio chemistry padichirikan nu solla vekkama irukku