ப்ளடி மேரி ( bloody marry )
அதென்ன ப்ளடி மேரி...? யார் அது?
'ப்ளடி மேரி' என்பது இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு கொடுங்கோல் அரசியின் ஆவி! வாழ்ந்த காலத்திலேயே ரத்த வெறி பிடித்து அலைந்தவள், பேராசைகளோடு இறந்துபோனால் என்னவாகும்? அதைதான் பார்க்கப்போகிறோம்...
சரி அவள் என்ன செய்வாள்? தூங்கிகொண்டிருக்கும் அந்த துர் ஆன்மாவை எழுப்பினால்.. கொடூரமாக கொல்லுவாள்..! சரி எப்படி அவளை எழுப்புவது? எப்படி அழைத்தால் வருவாள்?
ஓசை எழுப்பாமல் தொடருங்கள்...
முழுவதும் இருட்டாக்கப்பட்ட அறையில், (எ.கா : பாத்ரூம்) ஒரு மெழுகுவர்த்தியை பற்றவைத்து, நம் முகத்துக்கு கீழே வைத்துக்கொண்டு, மூன்று முறை “ப்ளடி மேரி” என்றழைத்தால் அந்த மேரியின் உருவம் நம் முதுக்குக்கு பின்னால் தோன்றுமாம்! (அந்த உருவம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் பார்க்க விரும்புவோம் கான்ஜூரிங் 2 படத்தில் வந்த பேயை நினைத்துப்பார்த்து நடுங்கவும்)
இணையத்தில் ப்ளடி மேரியை பார்த்தோம் என்று ஏகப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சுற்றுகிறது. எப்படி வந்தார் எப்படி கொன்றார் என்றெல்லாம் வர்ணித்து எழுதியுள்ளார்கள்.
அதைப்பற்றிய வர்ணனையில் என்னை கவர்ந்த வர்ணனை இதுதான். அதாவது நம் முகத்துக்கு நேராக மெழுகுவர்த்தியை பற்ற வைத்துக்கொண்டு, மனதை ஒருநிலைப்படுத்தி, "ப்ளடி மேரி.." என மூன்று முறை அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால் அந்த இடத்தின் உஷ்ணம் சட்டென குறைந்து, நம் உடல் நடுங்க ஆரம்பிக்குமாம். தொடர்ந்து ஒரு மெல்லிய விசும்பல் கேட்குமாம், அந்த விசும்பல் அழுகையாக மாறி, அழுகுரல் பெரிதாகி மரண ஓலமாகுமாம், சிரித்தும் அழுதும் வெறிகொண்டு உறுமியும் அக்குரல் நம்மை நெருங்குமாம், அந்த சமயத்தில் அழுகிப்போன பிணத்தின் மீதடிக்கும் துர்நாற்றம் வீசும் என்றும் அந்த நாற்றம் அதிகமாகி, நம்மை மயக்கமடைய வைக்கும்.... இவ்வாறாக நீள்கிறது..
இதன் பிறகுதான் நம்ம மேரியக்கா என்ட்ரி கொடுபார்! தலைக்கு பின்னால் கரிய உருவமாக தோன்றி, மெல்ல நம்மை அணுகி... முதுகுப்புறமாக நம்மை கட்டியணைத்து... அவள் நகங்களால் உடலை கீறி இரண்டாக பிளந்து வெளியேறும் ரத்தத்தில் ஆனந்த குளியல் போடுவாளாம்! எப்படி கேட்கவே குஜாலா இருக்கா? வேண்டுமென்றால் நீங்களும் முயற்சித்துப்பாருங்களேன்! (வரவில்லை என்றால் மேரிக்கு மூடு இல்லன்னு நினைச்சிகோங்க.. என்கிட்ட பஞ்சாயத்துக்கு வராதிங்க..)
இப்படிதான் பெரும்பாலானோர் ப்ளடி மேரி கதையை சொல்கிறார்கள். அல்லது கதை விடுகிறார்கள்...
ரத்தவிளாறாக பாத்ரூமில் இறந்து கிடந்த சிலருடைய மரணத்தில் உள்ள மர்மங்கள் என்னவென்று தெரியாமல் போக... சிலர் அந்த மரணங்களுக்கு “ப்ளடி மேரி” தான் காரணம் என்று கிளப்பி விட்டுவிட்டனர். அதன் பொருட்டு “ப்ளடி மேரி” பிரபல பேய் ஆனாள்! முடிக்கப்படாத வழக்குகளை லோக்கல் திருடன் தலையில் கட்டி கணக்கை முடிக்கும் போலீஸ் போல சில விடைதெரியாத மரணங்களுக்கு மேரி காரணமானாள்.
'இரத்த மேரி' இந்த பெயரால் உருவாக்கப்பட்ட புனைவுகள் நிறைய உண்டு. யூ ட்யூப்பில் “Bloody Marry” என்று தேடிப்பாருங்களேன், ஏகப்பட்ட வீடியோக்கள் கிடைக்கும். கொஞ்சம் நல்ல என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கும் என்பதில் மாற்றமே இல்லை.
"இது உண்மையா பொய்யா?" என்பதை தாண்டி இந்த ஆவியின் அணுகுமுறை சற்று வித்தியாசமாக, ஹாலிவுட் படங்களில் காட்டுவதுபோல புதுமையாகவும், முதுகுத்தண்டை சில்லிட வைப்பதாகவும் இருப்பதால், மேரி குறுகிய காலத்தில் பிரபல அந்தஸ்தைப் பெற்றாள்!
இதைக்குறித்து ஆய்வாளர்கள் இவ்வாறாக சொல்கிறார்கள்... " இருளில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து கண்ணாடியை பார்க்கும்போது நம்முடைய நிழல் நம்மைவிட பெரிதாக நம் முதுகுக்கு பின்னால் தெரிகிறது... அதைதான் நம்மாட்கள் மேரி என்றெல்லாம் குழப்பிக்கொள்கிறார்கள்"!
அது சரிதான்! யாருய்யா அந்த மேரி? அவ ரத்தம்தான் குடிப்பாளா? தண்ணியெல்லாம் குடிக்க மாட்டாளா? என்கிற கேள்வியோடு அவள் வரலாற்றை ஆராய ஆரம்பித்தோம்..
ப்ளாஷ் பேக் போலாமா?
கிபி 1500 களில் பிரான்சில் வாழ்ந்த “Mary Tudor” எனும் மகாராணிதான் பிற்காலத்தில் 'ப்ளடி மேரி' என்றழைக்கப்பட்டவர். இவர் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபலாமான பேரரசர் "எட்டாம் ஹென்றி" என்பவருடைய மகள்..! குஜால் பேர்வழியான அரசருக்கு ஏராளமான மனைவிகள் உண்டு. மனிதர் ஆசைதீர வாழ்வார் வாழும் வரை வாழ்ந்துவிட்டு அவருக்கு சலித்துப்போகும்போது, பிடிக்காத மனைவிகளை படுகொலை செய்வது அவருக்கு பொழுதுபோக்கு.

எட்டாம் ஹென்றி - Henry the 8th
காலப்போக்கில் கொலைவெறியும் அதிகார வெறியும் தலைக்கேற, மனைவிகளை மட்டுமன்றி சுற்றி இருந்த நல்ல மனிதர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. கொலைவெறி தலைக்கேரும்போது உயிர்ப்பலி அவருக்கு தேவை. மன்னரிடம் இருந்து மேரியும் அவள் தங்கையும் மட்டும் தப்பிப்பிழைத்தனர்! மேரி அவருடைய முதல் மனைவிக்கு பிறந்தவள் என்பது உப செய்தி.
மேரி பார்க்க மிகவும் சுமாராக இருந்ததால் அவரை மணமுடிக்க யாரும் முன்வரவில்லை. அவருடைய தந்தை இருந்தபோது மேரியின் வயது 37.. அந்த வயதில் அரியணை ஏறினாலும், அவர் ஒரு மகாராணி என்று மக்கள் மதிக்கவில்லை. காரணம் அவருடைய தோற்றம். இதனால் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்தார். பின் அவர் செல்வாக்கை பயன்படுத்தி, தன்னைவிட வயது குறைந்த ஒரு இளவரசனை மனம் முடித்தார். அவரும் மேரியை நேசிக்காமல் போகவே, கடைசி பற்றுதலாக மேரிக்கு இருந்தது, அவர் சார்ந்த கத்தோலிக்க மதம்தான்.
கத்தோலிக்க மதத்தை நாடு முழுக்க பரப்ப நினைத்தார். எதிர்பாளர்களை உயிருடன் கொளுத்தினார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அவருக்கு ப்ளடி மேரி என்று பெயர் வந்தது. கணவனுடனும் ஒட்டுதல் இல்லாமல், மக்கள் செல்வாக்கும் இல்லாமல் பைத்தியம் போல தனி அறையில் அடைந்துக்கிடந்த மேரி, அங்கு தனக்கு துணையாக வைத்திருந்தது கண்ணாடி மட்டும்தானாம். அதனால் அவர் ஆத்மா அந்த கண்ணாடியிலேயே நிலைத்துவிட்டதாக ஒரு கருத்தும் உண்டு.
இதை தவிர, மேரியை பற்றி ஏராளமான கட்டுக்கதைகளும் சொல்கிறார்கள்...
மூட நம்பிக்கைகள் காரணமாக, வயதான பிறகு அரியணை ஏறியதால் தன் அழகு போய்விட்டதாக எண்ணிய மேரி. அழகை திரும்பப்பெற இளம்பெண்களின் ரத்தத்தில் குளிக்க வேண்டும் என்று யாரோ சொன்னதை நம்பி ரத்தக்குளியல் போட்டதாகவும், அவர் குளிக்க ஏராளமான பெண்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதாகவும் ஆதாரமற்ற கதைகள் உண்டு.
(மேரியை பற்றி இருவேறு கருத்துக்கள் உண்டு. மதத்தை திணித்ததை தவிர ரொம்ம்ம்ப நல்லவர் என்றொரு கருத்தும் உண்டு. மர்மங்களை உள்ளடக்கிய ஒரு பெயர் என்பதால் பரபரப்பாக உலவும் கருத்தை பார்ப்போம்)
தினமும் இரத்த குளியல் முடிந்த கையேடு நிலைக்கண்ணாடி முன் சென்று நின்றுக்கொள்வாராம்... தன் அழகாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு இரத்தம் வழியும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து ரசிப்பாளாம். அல்லக்கைகள் "ஆமாம் மகாராணி இன்று உங்கள் அழகு கூடியுள்ளது ! " என்றெல்லாம் அடித்து விட்டிருக்ககூடும்.
அழகு கூடுவதாக மகாராணி நினைத்துக்கொள்ள அந்த ரத்தகுளியல் மேட்டர் நாளுக்கு நாள் அதிகமானது.
குளியல், கண்ணாடி முன் நின்று தன்னழகை கண்டு பிரமித்தல்... இந்த இரண்டையுமே அரசாங்கத்தின் வேலையாக பார்க்க ஆரம்பித்தார்!
இப்போது புரியுமே! மேரியின் ஆவியை அழைக்க ஏன் கண்ணாடி வேண்டும் என்று!
கண்ணாடியை பார்த்துப்பார்த்து நாளடைவில் அவளுடைய ஆன்மாவே கண்ணாடிக்குள்தான் இருக்கிறது என்று நம்ப ஆரம்பித்தாள்! அவள் இறந்த பிறகு, அந்த ஆவி அதாவது அவளுடைய ஆன்மா அந்த கண்ணாடிகுள்ளேயே மையம் கொண்டது என்கிறார்கள்! அதை மெய்ப்பிக்கும் விதமாக மேரியை குறித்து வரும் செய்திகளும், அமானுஷ்ய கதைகளும் கண்ணாடியை வைத்தே சொல்லப்பட்டதால், அதன்பின் வந்த வதந்திகள் அதை உண்மையாக்கியது !

ப்ளடி மேரியின் படம் - Photo of bloody mary or mary tudor
தற்போது ப்ளடி மேரி கதையை சொல்பவர்கள், "இப்போது அவள் அங்கு அமைதியாக தன் அழகை ரசித்துக்கொண்டு இருக்கிறாள், அவளை நீங்கள் அழைக்காமல் அவள் கவனத்தை கலைக்காமல் அவள் வெளியே வர மாட்டாள்... அதனால் அவளை சீண்டாமல் இருப்பது நல்லது " என்கிறார்கள் மீறி அழைத்தால் அவள் தூக்கம் களைந்து எழுந்து வந்துவிடுவாள், அப்படி வந்தால் அவளுக்கு உடனடியாக ரத்தக்குளியல் தேவை. அழைப்பவர்கள் கதி அதோகதிதான் என்கிறார்கள்.
இது ஒரு சுவாரசியமான கதை என்கிற அளவிலேயே நாம் கடந்து போவோம். ஆனால், சில விடைதெரியாத மர்ம மரணங்களுக்கு மேரி பொறுப்பானதை மட்டும் மறுப்பதற்கில்லை!
ஆனா ஒண்ணு நானெல்லாம் இதை கேள்விப்பட்ட அன்னைக்கே பாத்ரூம்ல உள்ள கண்ணாடிய ரிமூவ் பண்ண சொல்லிட்டேன்! கண்ணாடியை பார்த்து தலைவாற கூட பயமா இருக்கு.... நமக்கேன் வம்பு !!!

Add a Comment
9 Comments
Naan try pannen apdi onnum nadekkele
Nice story
Kathai romba nalla iruku sema kalakkal
நம்புற மாதிரியா இருக்கு
Ss, nanum try panala, namaken vambu
நானும் படித்துள்ளேன். படமாக வந்ததையும் பார்த்துள்ளேன்
Nice way of narrating... Sign of a good writer..
Sema
Ayyo padichale bayama iruku