கற்காலத்தில் மனிதன் எதிரிகளிடம் இருந்தும், கொடிய மிருகங்களிடம் இருந்தும் தப்பவேண்டி, அதற்கு வாகாக ஒரு மிருகத்தை பழக்க நினைத்தான், அவன் கண்காணித்ததில் மிக வேகமாக ஓடக்கூடியதாகவும் பழக்குவதற்கும் எளிதாகவும் இருந்த மிருகம் குதிரைதான்! அதை பழக்க ஆரம்பித்தது மனித நாகரீகத்தின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு எனலாம்.
குதிரையை பழக்க ஆரம்பித்தபிறகுதான் மனிதன் தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தான்...
பெருவெடிப்புக்கு பின், நாம் வாழும் பூமி ஒருமாதிரி கோளமாக உருவானது. அந்த சமயத்தில், உலகெங்கும் கிலோமீட்டர் கணக்கில் ராட்சத சுனாமி அலைகள் சுழன்று அடிக்க, ஆக்சிஜன் என்ற ஒன்றே இல்லாத காலகட்டமது. பெருவெடிப்பின் மிச்சமாக பூமி முழுவதும் உஷ்ணம் சூழ்ந்திருக்க , கொதிக்கும் தோசைக்கல்லில் தெளித்த தண்ணீரை போல, கடலலைகள் எழுந்து பூமிப்பந்தை நனைத்து பூமிப்பரப்பின் சூட்டை கொஞ்சம் கொஞ்சமாக தணித்துக்கொண்டிருந்தது !
நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது விளையாட்டாக சொல்வதுண்டு ! “ உனக்கெல்லாம் சிக்கன் லெக்பீஸ் பத்தாதுடா.. டைனோசர் லெக்பீஸ்தான் சரிவரும்” என. ஆனால் நாம் கிண்டலுக்காக சொல்லும் இவ்விஷயத்தில் உண்மையும் உள்ளது. நம்புவீர்களா ? நாம் சிக்கன் என விரும்பி சாப்பிடும் கோழி டைனோசர் இனத்தை சார்ந்தது என்பதை !
அறிவியலின்படி அது சாத்தியம்தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் சார்பியல் கோட்பாட்டில் ( Special Relativity Theory) இதற்கான பதில் கிடைக்கிறது. டைம் ஃபிரேம், பாரடாக்ஸ், வார்ம் ஹோல் என்றெல்லாம் விரிவாக பார்க்க வேண்டும். ஒவ்வொன்றாக எனக்கு தெரிந்தவரை விளக்குகிறேன். வாருங்கள் காலவெளியில் கலப்போம்...
ஆங்கிலத்தில் யுனிவர்ஸ் (universe) என்பார்கள். அண்டம் என்பது, நம் கற்பனைக்குள் அடக்கமுடியாத அளவு மிகப்பெரியதும், அதிசயமானதும், மர்மங்களை உள்ளடக்கியதும் ஆகும்.
ஆம், அண்டம் என்பது அளவில்லாதது, விரிந்துக்கொண்டே செல்வது, infinite அண்டம் என்பதை வார்த்தைகளில் விளக்கவே முடியாது, அதனால் அதை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு அதற்குள் அடங்கியுள்ள மற்றவைகளை பார்ப்போம், அதிலிருந்து அண்டத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள் !