டைனோசர்கள் பூமியில் உள்ளதா ?

நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது விளையாட்டாக சொல்வதுண்டு, “உனக்கெல்லாம் சிக்கன் லெக்பீஸ் பத்தாதுடா.. டைனோசர் லெக்பீஸ்தான் சரிவரும்” என. நாம் கிண்டலுக்காக சொல்லும் இவ்விஷயத்தில் உண்மையும் உள்ளது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்...  

ஆம், நாம் சிக்கன் என ஆசையாசையாக சாப்பிடும் கோழி ஒரு குட்டி டைனோசர்! கிட்டத்தட்ட 165 கிலோவரை இருந்த கார்னிவர்ஸ் என்கிற இனம் பரிணாம ஜிம்மில் பல்லாயிரம் வருடங்கள் வொர்க் அவுட் செய்து எடையை குறைத்து தற்போதைய எடைக்கு வந்துவிட்டது. அதுதான் கோழி...! கோழி மட்டுமல்ல தற்போது வாழும் பறவகைகள் அனைத்துக்குமே ஆதார இனம்.... டைனோசர்கள்தான்!

நீண்ட ஆய்வுக்குப்பின் இதை கண்டுபிடித்துள்ளனர். பறவைகளின் ஆதார இனங்கள் மொத்தம் நாற்பத்தி எட்டுதான்! அதிலிருந்துதான் நூற்றுக்கணக்கான கிளைகளாக பிரிந்து, பலவகையான பறவைகள் உருவாகின, பரிணாமத்தில் சூழலுக்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொண்டு, உயிர் வாழ்தலில் வென்ற பறவைகள்தான் தற்போது உயிருடன் நம்முன் உலவும் குட்டி டைனோசர்கள்! ஆராய்ச்சியாளர்கள் செல்லமாக 'TINY DINOSURES' என்பார்கள்!

டைனோசர் - பறவைகள் பரிணாம வளர்ச்சி !

பறவைகள் எப்படி உருவாகின? என்று அமெரிக்காவை சேர்ந்த TSU யுனிவர்சிடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வில் இறங்கியது. ஆராய்ச்சியாளர் "பிராண்ட் ஃபேர்க்ளோத்" (Brand Faircloth) என்பவர்தான் இதை முதலில் "இன்று நாம் காணும் பறவைகள் அனைத்தும் டைனோசர் இனத்தை சார்ந்ததுதான்" என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தார்.

விண்கற்கள் விழுந்துதான் முதல்முறையாக உலகம் அழிந்தது அல்லது புதுப்பித்துக்கொண்டது என்பார்கள். அந்த விபத்தில்தான் டைனோசர் இனங்களும் முற்றிலுமாக அழிந்துபோனது என்கிறார்கள். பிறகு எப்படி இவையெல்லாம் பிழைத்தது ? சின்னதாக உருமாறியது என்கிற கேள்வி வருமல்லவா? இதோ... வாருங்கள் பார்ப்போம்...

விண்கற்கள் பூமியை தாக்கி அழித்தபோது டைனோசர்கள் முற்றிலும் அழியவில்லை! நீருக்கடியிலும், குகைகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்து தன்னை காத்துக்கொண்ட டைனோசர்கள் உண்டு என்கிறார்கள். அதில் கார்னிவர்ஸ் அதிகமாக தப்பிப்பிழைத்திருக்கலாம் என்றொரு கூற்றை சில ஆதாரங்களுடன் முன் வைக்கிறார்கள். அதுமட்டும் எப்படி தப்பித்தது என்றால்?  கார்னிவர்ஸ் எடை குறைவு அதிகபட்சம் 165 கிலோ இருந்திருக்கலாம்.. எங்காவது ஓடி ஒளிய, தன்னை மறைத்துக்கொள்ள அந்த உருவம் ஏதுவாக இருந்தது. அதனால்தான் அது தப்பிப்பிழைத்தது என்கிறார்கள்.

தப்பிப்பிழைத்த மற்ற டைனோசர்களில் மாமிச பட்சினிகளுக்கு கொஞ்சம் ஆயுசு அதிகம், பாவம் தாவர பட்சினிகள், மரம் செடி கொடிகள் முற்றிலும் அழிந்துபோனதால், உன்ன உணவின்றியும், மாமிச பட்சிணிகளின் பசிக்கு இரையாகியும் ஆங்காங்கே செத்து வீழ்ந்தது.

கார்னிவர்ஸ் வகையை சேர்ந்த டைனோசர் 

கார்னிவர்ஸ் போன்ற மற்ற டைனோசர் இனங்கள் கொஞ்சமாக கிடைத்ததை உண்டு தன் இனத்தை நீட்டித்துக்கொண்டது. பரிணாமத்தில் அதன் சைஸ் குறைய இதுவும் ஒரு காரணம். கிட்டத்தட்ட 12 கட்ட பரிணாம வளர்ச்சியில் (வளர்ச்சியா வீழ்ச்சியா?) அதன் 165 கிலோ எடை வெறும் 800 கிராமாக குறைந்துபோனது.

கோழிகளின் பரிணாம வளர்ச்சி.. (வீழ்ச்சி) 

டைனோசர்கள் சுருங்கிக்கொண்டே போக முக்கிய காரணம் இன நீடிப்புதான் என்கிறார்கள். தவிர குட்டியாக இருப்பது தாக்குதல்களில் இருந்து தன்னை தற்காத்துக்கொண்டு எங்காவது மறைந்துக்கொள்ளவும் உதவியது. பரிணாமத்தில் குட்டியாக இருந்தால் மரமேரலாம், வேகமாக ஓடலாம் இன்னும் சில பல “லாம்கள்” இருந்ததால் உயிர் வாழ்தல் பந்தயத்தில் தன்னை சுருக்கிக்கொண்டது. வாழ்வையும் நீட்டித்துக்கொண்டது..

புறாவின் பரிணாம வளர்ச்சி 

ஆராய்ச்சியாளர்கள் ஏதோ குருட்டாம்போக்காக அடித்துவிட்ட கதையல்ல இது! கிட்டத்தட்ட 1500 டைனோசர்களின் எலும்புக்கூட்டை பரிசோதித்து, அதன் காலகட்டங்களை ஆராய்ந்து வெளியிட்ட பக்கா அறிக்கை.

கிட்டதட்ட முக்கால்வாசி டைனோசர்களுக்கு இறகு இருந்ததாம், சிறகு அல்ல “இறகு” பறக்க முடியாது, கொஞ்சம் நாளாக நாளாக பரிணாம வளர்ச்சியில் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள குதித்துக்குதித்து ஓடி, பின் பிறகு இறகுகள் சிறகுகலாகி, சிறகுகள் பெரிதாக  ஆக, எடை குறைந்த உடலை தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்ததது.

எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், நிலத்தில் உள்ள உணவை கவ்விக்கொண்டு பறந்து தனியாக எங்காவது “டினோசர் நடமாட்டம்” இல்லாத காட்டில் வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது. மெல்ல மெல்ல ஏழெட்டு கட்டமாக பரிணமித்து பின் இந்த உருவம் எடுத்திருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி பார்த்தால், தற்போதும் நம்முடன் 10,000 வகையான டைனி டைனோசர்கள் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

அதனால் புரோட்டின் நிறைந்த கார்னிவர்சை உண்டு, வளமோடு வாழ்வோம் !

அடுத்தமுறை சிக்கன் லெக்பீசை கடிக்கும்போது ஜுராசிக் பார்க் படத்தில் வரும் பெரிய்ய டைனோசரை நினைத்து பயந்துக்கொண்டே கடியுங்கள்....